/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கும்பக்கரையில் வெள்ளப் பெருக்கு சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம்
/
கும்பக்கரையில் வெள்ளப் பெருக்கு சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம்
கும்பக்கரையில் வெள்ளப் பெருக்கு சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம்
கும்பக்கரையில் வெள்ளப் பெருக்கு சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம்
ADDED : அக் 07, 2024 07:21 AM

பெரியகுளம்: கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்த மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று மதியம் முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தது.
பெரியகுளம் அருகே 8 கி.மீ., தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. நேற்று காலாண்டு தேர்வு விடுமுறை கடைசி நாளை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து காலை 8:00 மணிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளிக்க ஆரம்பித்தனர். காலை 9:00 மணிக்கு சாரல் மழை பெய்தது. கொடைக்கானல் மலைப் பகுதியான வட்டக்காணல், வெள்ளகெவி பகுதியில் பெய்த மழையால் மதியம் 1:20 மணிக்கு அருவியில் தண்ணீர் கூடுதலாக வரத் துவங்கியது. காலை 8:00 முதல் மாலை 5:30 மணி வரை சுற்றுலாப் பயணிகள் குளித்தனர். மதியம் 1:30 மணிக்கு ரேஞ்சர் அன்பழகன் சுற்றுலாப் பயணிகளை கரைக்கு வர அறிவுறுத்தினார். அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர். இதனை தொடர்ந்து மதியம் 2:00 மணிக்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ரேஞ்சர் அன்பழகன் தண்ணீர் வரத்து சீராகும் வரை குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.-