/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வெயிலை சமாளிக்க கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
/
வெயிலை சமாளிக்க கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
வெயிலை சமாளிக்க கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
வெயிலை சமாளிக்க கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
ADDED : ஏப் 22, 2025 06:37 AM

பெரியகுளம்: வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் கும்பக்கரை அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
பெரியகுளத்தில் அருகே கும்பக்கரை அருவி உள்ளது.
கொடைக்கானல் மலை அடிவாரம், கும்பக்கரை அருவி நீர்ப்பிடிப்புப் பகுதியில் இரு நாட்களுக்கு முன் பெய்த மழையால் அருவிக்கு தண்ணீர் வருகிறது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க அதிகளவில் வருகின்றனர்.
அரசு பொது தேர்வுகள் முடிந்த நிலையில் நேற்றும் ஏராளமானோர் கொடைக்கானல் சென்று விட்டு, கும்பக்கரை அருவி நீரோடை பகுதியிலும், அருவி பகுதியிலும் குளித்து மகிழ்ந்தனர்.
போலீஸ் கண்காணிப்பு அவசியம்
பெரியகுளம் வடகரை போலீஸ் ஸ்டேஷனில் முந்தைய காலங்களில் வார இறுதி நாட்களில் ஆண், பெண் போலீசார் இருவர் பாதுகாப்புக்கு வந்து செல்வர். தற்போது வருவதில்லை.
இதனால் அருவிப் பகுதி மேற்புறம் சிலர் தேவையின்றி சுற்றுகின்றனர்.
இதனால் அருவியில் குளிக்கும் பெண்கள் சங்கடப்படுகின்றனர். அருவி பகுதியில் போலீசாரை பாதுகாப்புக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.