/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஹைடல் பூங்காவில் பூத்த நீலக்குறிஞ்சி பூக்கள் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ADDED : அக் 25, 2025 04:56 AM

மூணாறு: மூணாறில் ஹைடல் பூங்காவில் நீலக்குறிஞ்சி பூக்கள் பூத்துள்ளன.
மூணாறில் 12 ஆண்டு களுக்கு ஒரு முறை பூக்கும் 'ஸ்டெரபாலந்தஸ் குந்தியானா' எனும் தவாரவியல் பெயர் கொண்ட குறிஞ்சி பூக்கள் இறுதியாக 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் பல பகுதிகளில் பெரும் அளவில் பூத்தன.
தவிர ஒரு சில பகுதிகளில் 12 ஆண்டுகள் இடைவெளியில் பரவ லாகவும் பூக்கின்றன.
மூணாறில் பொறியியல் கல்லூரி ரோடு, மாட்டுபட்டி ஆகிய பகுதியில் கடந்த ஆகஸ்ட்டில் குறிஞ்சி பூக்கள் பூத்தன. அதேபோல் கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கேப் ரோடு அருகே சொக்கர்முடி மலையில் குறிஞ்சி பரவலாக பூத்துள்ளன.
இந்நிலையில் பழைய மூணாறில் உள்ள ஹைடல் பூங்காவில் வளர்க்கப்பட்ட குறிஞ்சி செடிகளில் நீலக் குறிஞ்சி பூக்கள் பூத்துள்ளன. அதனால் மகிழ்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள் நீலக் குறிஞ்சி பூக்களை ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.