/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'ஹைடல் டூரிசம்' ஊழியர்கள் நாளை முதல்வேலை நிறுத்த போராட்டம்
/
'ஹைடல் டூரிசம்' ஊழியர்கள் நாளை முதல்வேலை நிறுத்த போராட்டம்
'ஹைடல் டூரிசம்' ஊழியர்கள் நாளை முதல்வேலை நிறுத்த போராட்டம்
'ஹைடல் டூரிசம்' ஊழியர்கள் நாளை முதல்வேலை நிறுத்த போராட்டம்
ADDED : அக் 25, 2025 04:56 AM
மூணாறு: சி.ஐ.டி.யு.வைச் சேர்ந்த ஹைடல் டூரிசம் ஊழியர்கள் சங்கத்தினர் நாளை (அக்.26) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்து கின்றனர்.
கேரளாவில் மின்துறை சார்பிலான ஹைடல் டூரிசம் மையங்களில் 180க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
அவர்களுக்கு போனஸ், ஊதிய உயர்வு வழங்க வேண்டும். வீட்டு வாடகை கொடுக்க வேண்டும்.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. சார்பிலான ஹைடல் டூரிசம் ஊழியர்கள் சங்கத்தினர் நாளை (அக்.26) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துகின்றனர்.
அதனால் ஹைடல் டூரிசம் சார்பிலான சுற்றுலா பகுதிகள் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
இந்நிலையில் வேலை நிறுத்த போராட்டத்திற்கு எதிராக ஹைடல் டூரிசம் இயக்குனர் அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
காலவரையற்ற போராட்டத்தை உயர் நீதிமன்றம் உத்தரவுபடி சட்டவிரோதமானதாக அறிவிக்க வேண்டும்.
போராட்ட நாட்களின் ஊதியம் வழங்க இயலாது. பணிக்கு செல்லும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், என கூறியுள்ளார்.

