/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்காத மினி பஸ்களால் டவுன் பஸ் வருவாய் இழப்பு
/
அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்காத மினி பஸ்களால் டவுன் பஸ் வருவாய் இழப்பு
அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்காத மினி பஸ்களால் டவுன் பஸ் வருவாய் இழப்பு
அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்காத மினி பஸ்களால் டவுன் பஸ் வருவாய் இழப்பு
ADDED : ஆக 15, 2025 02:40 AM
ஆண்டிபட்டி:ஆண்டிபட்டியில் இருந்து கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்ட வழித்தடத்தில் மினி பஸ்களை இயக்காமல் மாற்று வழித்தடத்தில் இயக்குவதால் அரசு டவுன் பஸ்களில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
மாவட்டம் முழுவதும் டவுன் பஸ் வசதி கிடைக்காத பல்வேறு குக்கிராமங்களுக்கு தனியார் மினி பஸ் இயக்கும் திட்டம் தமிழக அரசால் சமீபத்தில் துவக்கப்பட்டது.
இத்திட்டத்தில் ஆண்டிபட்டியில் இருந்து கொண்டமநாயக்கன்பட்டி, அம்பேத்கர் நகர், மேக்கிழார்பட்டி, ரங்கராம்பட்டி பிரிவு, சித்தயகவுண்டன்பட்டி பிரிவு, வழியாக ஏத்தக்கோவில் கிராமத்திற்கும், பின் அங்கிருந்து சித்தயகவுண்டன்பட்டி பிரிவு, ரங்கராம்பட்டி பிரிவு, அனுப்பபட்டி பிரிவு, போடிதாசன்பட்டி, மணியாரம் பட்டி பிரிவு வழியாக சென்னமநாயக்கன்பட்டி, முல்லையம்பட்டி சென்று மீண்டும் அதே வழித்தடத்தில் ஆண்டிபட்டிக்கு திரும்ப வர வேண்டும்.
இந்த வழித்தடத்தில் இயக்காமல் மினி பஸ்களை ஆண்டிபட்டியில் இருந்து மணியாரம்பட்டி, மறவபட்டி, போடிதாசன்பட்டி, அனுப்பபட்டி சித்தயகவுண்டன்பட்டி வழியாக ஏத்தக்கோவில் கிராமத்திற்கும் பின் அதே வழித்தடத்தில் ஆண்டிபட்டிக்கும் இயக்கப்படுகிறது.
பொதுமக்கள் கூறியதாவது: ஆண்டிபட்டியில் இருந்து ஏத்தக்கோவில் கிராமத்திற்கு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை அரசு டவுன் பஸ் வசதி உள்ளது. டவுன்பஸ் வசதி கிடைக்காத அம்பேத்கர்நகர், மேக்கிழார்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி, முல்லையம்பட்டி கிராமங்களுக்கு மினி பஸ்களை இயக்காமல் வழித்தடத்தை மாற்றி அரசு டவுன் பஸ்சுக்கு போட்டியாக இயக்குவதால் அரசு டவுன் பஸ்களில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் மினி பஸ்கள் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.