/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
புதிய பாலத்தில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் டவுன் பஸ் நிறுத்தம்

ADDED : ஆக 19, 2025 12:55 AM
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி ஒன்றியம், பழைய கோட்டை கிராமத்தின் நுழைவுப் பகுதியில் உள்ள ஓடையில் சமீபத்தில் புதிய பாலம் கட்டப்பட்டது. தற்போது பாலத்தின் குறுக்காக உயர் அழுத்த மின் கம்பிகள் தாழ்வான நிலையில் உள்ளது.
இதனால் பாலத்தின் வழியாக பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியவில்லை. மின் கம்பிகளை மாற்றி அமைக்கும் நடவடிக்கையும் இல்லை. இதனால் இப்பகுதிக்கு இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கூறியதாவது: பழைய கோட்டை கிராமத்திற்கு காலை 6:50, மாலை 4:20, இரவு 7:00 மணிக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக டவுன் பஸ் சேவை நிறுத்தப்பட்டதால் மாணவ மாணவிகள் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டிபட்டியில் இருந்து கதிர்நரசிங்கபுரம் வழியாக பழையகோட்டை சென்று திரும்பிய டவுன் பஸ் தற்போது 2 கி.மீ., தூரத்திற்கு முன்பே சக்கம்மாபட்டியில் இருந்து திரும்பி விடு கிறது.
தினமும் இப்பகுதி மக்கள் 2 கி.மீ., தூரம் நடந்து சென்று டவுன் பஸ் ஏறி செல்லவேண்டி உள்ளது. பாலத்தில் மின் கம்பிகளை மாற்றி அமைத்து மீண்டும் டவுன் பஸ் வசதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.