/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளியில் தகராறில் ஈடுபட்ட பேரூராட்சி தலைவர் கைது மருத்துவமனையில் அனுமதி

ADDED : ஏப் 15, 2025 06:24 AM

தேனி: தனியார் பள்ளியில் தாளாளருடன் தகராறில் ஈடுபட்ட பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவர் மிதுன் சக்கரவர்த்தி 40, வழக்கறிஞர் செல்வமனோகரன் 52, கைது செய்யப்பட்டனர்.
தேனி பழனிசெட்டிபட்டி அருகே பெனடிக் நகரில் தனியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. தாளாளராக ஸ்டாலின் மைக்கேல் உள்ளார். பெனிடிக் மிஷன் கல்வி அறக்கட்டளை நிர்வாகி செல்வ மனோகரன், கிருஷ்ணன், பாண்டீஸ்வரன் உள்ளிட்ட பலர் பள்ளிக்கு சென்றனர்.
அங்கு தன்னை தாக்கி நகைகளை பறித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக செல்வ மனோகரன், கிருஷ்ணன், பாண்டீஸ்வரன் உள்ளிட்ட சிலர் மீது ஸ்டாலின் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார்.
செல்வ மனோகரனை போலீசார் கைது செய்தனர். அவரது தகவலின்படி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தியை கைது செய்தனர். கைதான இருவரும் உடல்நலம் சரியில்லை எனக் கூறியதால் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயபாரதி விசாரித்து இருவருக்கும் ஜாமின் வழங்கினார். வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் தேடி வருகின்றனர்.