/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கேரளாவில் வர்த்தக சங்கத்தினர் நாளை கடையடைப்பு
/
கேரளாவில் வர்த்தக சங்கத்தினர் நாளை கடையடைப்பு
ADDED : பிப் 12, 2024 05:49 AM
மூணாறு: கேரளாவில் வியாபாரத்தை பாதுகாக்கக் கோரி வர்த்தக சங்கம் சார்பில் நடைபெறும் சுற்றுப்பயணம் நிறைவு பெற்று நடக்கும் பொதுக் கூட்டத்தை முன்னிட்டு நாளை (பிப்.13ல்) மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்படுகின்றன.
'கேரளாவில் பிளாஸ்டிக் தடை சட்டம், லைசென்ஸ் கட்டணம், மின்கட்டணம் உயர்வு, ஜி.எஸ்.டி. பெயரில் துன்புறுத்தல், குப்பை உள்ளிட்ட கழிவுகளை தரம் பிரித்து வழங்க வேண்டும்.' என்பன உள்பட பல்வேறு நிபந்தனைகளை அரசு கட்டாயமாக்கியதால் வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதற்கு தீர்வு காணக்கோரி கேரளா வியாபாரி, விவசாயி ஏகோபன சமிதி எனும் வர்த்தக சங்கத்தின் மாநில தலைவர் ராஜூஅப்சரா தலைமையில் ஜன. 29ல் காசர்கோட்டில் துவங்கிய சுற்றுப் பயணம் நாளை (பிப்.13ல்) திருவனந்தபுரத்தில் நிறைவு பெறுகிறது. அங்கு பிரமாண்டமாக பொதுக் கூட்டம் நடக்கிறது. அதனையொட்டி நாளை மாநிலம் முழுவதும் வர்த்தக சங்கம் சார்பில் கடைகள் அடைக்கப்படுகின்றன.