/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூலி உயர்வு பிரச்னையை தீர்க்க தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் 19 நாட்களாக தொடரும் வேலை நிறுத்தம்

ADDED : ஜன 19, 2025 05:40 AM

ஆண்டிபட்டி: சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி ஆண்டிபட்டியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் 5000 க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர். இரு ஆண்டுக்கு ஒரு முறை ஏற்படுத்தப்படும் இவர்களுக்கான கூலி உயர்வு ஒப்பந்தம் டிசம்பர் 31 ல் முடிந்தது. புதிய கூலி உயர்வு கேட்டு ஜனவரி 1 முதல் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.
ஆண்டிபட்டி பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு செய்து வரும் வேலை நிறுத்தம் இன்று 19வது நாளாக தொடர்கிறது.
ஜனவரி 6ல் திண்டுக்கல் தொழிலாளர் துணை ஆணையர் முன்னிலையில் தொழிற்சங்க பிரதிநிதிகள், விசைத்தறி உரிமையாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. ஜனவரி 13ல் தேனி கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு விசைத்தறி உரிமையாளர்கள் ஒரு சிலர் மட்டுமே பங்கேற்றனர். இதனால் பேச்சுவார்த்தை நடக்கவில்லை. விசைத்தறி தொழிலாளர்களின் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவதில் அரசு அதிகாரிகள் தாமதம் செய்வதை கண்டித்து தொ.மு.ச., அ.தொ.ச., ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., பி.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்கங்கள் சார்பில் ஆண்டிபட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.