/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெட்ரோல் குண்டு வீச்சில் வியாபாரி காயம்
/
பெட்ரோல் குண்டு வீச்சில் வியாபாரி காயம்
ADDED : ஜன 13, 2025 01:12 AM

கடமலைக்குண்டு,: தேனிமாவட்டம் வருஷநாட்டில் மர்ம நபர்கள் மூன்று பேர் இலவம் பஞ்சு வியாபாரி மீது பெட்ரோல் குண்டு வீசியதில் அவர் காயமடைந்தார்.
வருஷநாடு வி.பி.,தெரு இலவம் பஞ்சு வியாபாரி சதீஷ்குமார் 35. நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடித்து வந்தவர் டூவீலரை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றார். அப்போது மர்ம நபர்கள் மூன்று பேர் சதீஷ்குமார் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பினர். இதில் அவரின் உடல் முழுவதும் தீ பற்றிக் கொண்டது.
அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து அவரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரின் வீட்டின் அருகே தடயங்களை சேகரித்து வருஷநாடு போலீசார் விசாரிக்கின்றனர்.