/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாதந்தோறும் குறைதீர் கூட்டம் நடத்த வணிகர்கள் கோரிக்கை
/
மாதந்தோறும் குறைதீர் கூட்டம் நடத்த வணிகர்கள் கோரிக்கை
மாதந்தோறும் குறைதீர் கூட்டம் நடத்த வணிகர்கள் கோரிக்கை
மாதந்தோறும் குறைதீர் கூட்டம் நடத்த வணிகர்கள் கோரிக்கை
ADDED : ஏப் 23, 2025 05:48 AM
தேனி : 'மாவட்ட வணிகர்களை ஒருங்கிணைத்து குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும்வகையில் மாதந்தோறும் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும்.'' என, மாநில ஜி.எஸ்.டி, வரியினங்களுக்கான துணை ஆணையர் சுந்தரமூர்த்தியிடம் தேனி மாவட்டவணிகர்கள் சங்க கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.
தேனியில் உள்ள ஜி.எஸ்.டி., இணை ஆணையர் அலுவலகத்திற்கு வணிகர்கள் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆனந்தவேல், கண்ணதாசன், சீனிவாசன், சேது, குணசிங் ஆகியோர் சென்று மனு அளித்தனர்.
மனுவில் கூறியதாவது, 'மாதந்தோறும் மாநில ஜி.எஸ்.டி., வரி செலுத்தும், நடைமுறையில் அடிக்கடி அமலாகும் அதிநவீன நடைமுறைகள் குறித்துதெளிவாக தெரிந்து கொள்ள முடிவது இல்லை.
மேலும் மாநில ஜி.எஸ்.டி., தாக்கல் செய்யும் நடைமுறைகள் குறித்து தெளிவு படுத்த கோரினோம். மேலும் வணிகர்களின் குறைகளை தீர்க்கும் விதமாக அவர்களின் மனுக்களுக்கு தீர்வு காணும் விதமாக மாதந்தோறும் குறைதீர் கூட்டத்தை நடத்த வேண்டும். என மனுவில் கோரியுள்ளோம்.

