/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூணாறில் ரோட்டோர கடைகள் அகற்றம் கட்சியினர் முடிவுக்கு வர்த்தகர்கள் எதிர்ப்பு
/
மூணாறில் ரோட்டோர கடைகள் அகற்றம் கட்சியினர் முடிவுக்கு வர்த்தகர்கள் எதிர்ப்பு
மூணாறில் ரோட்டோர கடைகள் அகற்றம் கட்சியினர் முடிவுக்கு வர்த்தகர்கள் எதிர்ப்பு
மூணாறில் ரோட்டோர கடைகள் அகற்றம் கட்சியினர் முடிவுக்கு வர்த்தகர்கள் எதிர்ப்பு
ADDED : நவ 02, 2024 08:14 AM
மூணாறு,: மூணாறில் ரோட்டோர கடைகள் அகற்றுவதை தடுக்கும் வகையிலான அனைத்து கட்சி கூட்டத்தின் முடிவுக்கு எதிராக வியாபாரி, விவசாயி ஏகோபன சமிதி எனும் வர்த்தக சங்கம் களம் இறங்கியது.
இது தொடர்பாக சங்கத்தின் இடுக்கி மாவட்ட தலைவர் சன்னி பைம்பிள்ளில் கூறியதாவது: எம்.எல்.ஏ., உள்பட கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் எடுக்கப்பட்ட முடிவின் படி ரோட்டோர கடைகள் அகற்றும் பணி நடந்தது.
ஆனால் பணிகள் துவங்கியதும் நிலைமை மாறியது கடும் கண்டனத்துக்குறியது.
வாகனங்கள், ரோட்டோரங்கள் ஆகியவற்றில் நடக்கும் வர்த்தகம் சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தது. சுற்றுலா பகுதியான மூணாறில் 500 க்கும் மேற்பட்ட ரோட்டோர கடைகள் உள்ளன.
அரசு நிர்ணயித்த எட்டுக்கும் மேற்பட்ட லைசென்ஸ்கள், முன் தொகை, வாடகை, ஊதியம், மின்கட்டணம், ஜி.எஸ்.டி., நன்கொடை ஆகியவை வழங்கி வியாபாரிகள் வர்த்தகம் செய்கின்றனர்.
இவை எதுவும் இன்றி ரோட்டோர கடைகள் அதிக லாபம் அடைகின்றனர். அதனால் சிறிய வர்த்தக நிறுவனங்கள் ஏராளம் தொடர்ந்து செயல்பட இயலாமல் முடங்கின. ஆன்லைன் வர்த்தகம், கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊடுருவல் ஆகியவற்றால் சிறு வர்த்தகர்கள் திணறி வருகின்றனர்.
இதனிடையே ரோட்டோர கடைகள் அதிகரித்து வருகின்றன. அவற்றை அகற்றும் பணிக்கு எதிரான அனைத்து கட்சி கூட்டத்தின் முடிவுக்கு எதிராக வர்த்தகர்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.
மூணாறில் அகற்றப்பட்ட ரோட்டோர கடைகளை மீண்டும் வைத்தால் தடுப்போம், என வர்த்தக சங்க மூணாறு பகுதி தலைவர் பாபுலால் தெரிவித்தார்.