sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 சாக்கடை அகற்றத்தால் வர்த்தகர்கள் நிம்மதி

/

 சாக்கடை அகற்றத்தால் வர்த்தகர்கள் நிம்மதி

 சாக்கடை அகற்றத்தால் வர்த்தகர்கள் நிம்மதி

 சாக்கடை அகற்றத்தால் வர்த்தகர்கள் நிம்மதி


ADDED : பிப் 06, 2026 05:52 AM

Google News

ADDED : பிப் 06, 2026 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னமனூர்: சின்னமனூர் மெயின்ரோட்டில் பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாத சாக்கடை தற்போது சுத்தம் செய்ததால் வர்த்தகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

சின்னமனூர் நகராட்சி மெயின் ரோட்டின் மேற்கு பக்கம் உள்ள பல குறுக்கு வீதிகளில் சேகரமாகும் சாக்கடை கழிவு நீர், பாசனத்திற்கு பயன்படும் சின்ன வாய்க்காலில் திருப்பி விடப்படுகிறது. ஆனால் ரோட்டின் மேற்கு பகுதியில் சாக்கடை கட்டப்பட்டு பயனற்ற நிலையில் உள்ளது.ரோட்டின் கிழக்கு பக்கம் உள்ள சாக்கடை கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து சீப்பாலக்கோட்டை ரோடு வழியாக வந்து, மெயின்ரோட்டின் கலந்து,

மார்க்கையன்கோட்டை ரோடு விலக்கில் செல்கிறது.சாக்கடை பல ஆண்டுகளாக சுத்தம் செய்யவில்லை என்கின்றனர். இதில் டன் கணக்கில் கழிவுதேங்கி மெயின் - ரோடு முழுவதும் துர்நாற்றம் வீசியது. வர்த்தகர்கள், பொதுக்கள் பல முறை கூறியும், நகராட்சி வழக்கம் போல மவுனமாக இருந்தது. தற்போது திடீரென கிழக்கு பக்கம் உள்ள சாக்கடையை சுத்தம் செய்து வருகிறது. வர்த்தகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us