UPDATED : நவ 17, 2026 07:51 PM
ADDED : நவ 17, 2026 07:46 PM
அ நிறம் | அளவு
தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேனி மாவட்டம் வழியாக பக்தர்கள் பயணம் செய்வார்கள்.
டிச., 12 முதல் ஜன.15 வரை தேனி மாவட்டம் வழியாக சபரிமலை செல்லும் பக்தர்கள் கம்பம் மெட்டு பாதை வழியாகவும் , சபரிமலையில் இருந்து தேனி வரும் பக்தர்கள் குமுளி வழித்தடத்தை பயன்படுத்த வேண்டும். திடீர் மழை, பனியை தவிர்க்க வானிலை நிலவர அறிவிப்புகளை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். தேனி கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை, 1077, 04546– 261093 ஆகிய அலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சிவகிருஷ்ண மூர்த்தி தெரிவித்தார்.
