/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
புறவழிச்சாலையில் தொழு மாடுகளால் போக்குவரத்து நெரிசல்
/
புறவழிச்சாலையில் தொழு மாடுகளால் போக்குவரத்து நெரிசல்
புறவழிச்சாலையில் தொழு மாடுகளால் போக்குவரத்து நெரிசல்
புறவழிச்சாலையில் தொழு மாடுகளால் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜன 07, 2024 07:07 AM

கூடலுார்: கூடலுார் புறவழிச்சாலையில் தொழு மாடுகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கூடலுாரில் வெட்டுக்காடு, காஞ்சிமரத்துறை, பளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான தொழு மாடுகள் வழர்க்கப்பட்டு வருகின்றன.
இவைகள் மேய்ச்சலுக்காக தினமும் கூடலுார் புறவழிச்சாலை வழியாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளுக்கு ஓட்டி செல்லப்படுகிறது.
காலை, மாலையில் ரோடு முழுவதையும் ஆக்கிரமித்து மாடுகள் செல்வதால் வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன.
மேலும் டூவீலரில் வருபவர்கள் விபத்தில் சிக்குகின்றனர்.
தற்போது சபரிமலையில் மகரஜோதி விழாவிற்காக ஏராளமான பக்தர்களின் வாகனங்கள் வந்த வண்ணம் உள்ளன. அனைத்து வாகனங்களும் காலை, மாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றன.
அதனால் சபரிமலை சீசன் முடியும் வரை மாநில நெடுஞ்சாலை மற்றும் புறவழிச் சாலையில் தொழு மாடுகளை ஓட்டிச் செல்ல தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.