/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கட்டுமானப் பொருட்களால் போக்குவரத்து இடையூறு
/
கட்டுமானப் பொருட்களால் போக்குவரத்து இடையூறு
ADDED : மார் 04, 2024 06:21 AM

பெரியகுளம்: பெரியகுளம் வடகரை மகாத்மா காந்திஜி தெரு ரோட்டில் கொட்டப்பட்டுள்ள கட்டுமான பொருட்களால் போக்குவரத்தில் இடையூறு ஏற்படுகிறது.
இத்தெருவில் வரதப்பர் தெரு வழியாக 400 மீட்டர் நடந்தால் பழைய பஸ்ஸ்டாண்ட் வந்தடையலாம். முக்கியமான இந்த தெரு வழியாக தினமும் ஏராளமான கனரக வாகனங்கள், டூவீலர்கள் சென்று வருகின்றன. பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு இந்த வழியாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன. தேனி, பெரியகுளம் பகுதி பள்ளி பஸ்கள், வேன்கள் செல்கின்றன. இவ்வாறான முக்கியத்துவம் பெற்ற தெருவில் கட்டட இடிபாடுகள், ஜல்லி கற்கள் மணல் ரோட்டில் கொட்டப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. நகராட்சி கட்டுமான பிரிவு அலுவலர் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கட்டுமான பொருட்களை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். -

