/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் ரயில்வே மேம்பாலப் பணிக்காக போக்குவரத்து மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது
/
தேனியில் ரயில்வே மேம்பாலப் பணிக்காக போக்குவரத்து மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது
தேனியில் ரயில்வே மேம்பாலப் பணிக்காக போக்குவரத்து மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது
தேனியில் ரயில்வே மேம்பாலப் பணிக்காக போக்குவரத்து மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது
ADDED : பிப் 11, 2024 01:53 AM

தேனி: தேனி மதுரை ரோட்டில் நடந்து வரும் ரயில்வே மேம்பால பணிக்காக தேனியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.
தேனி மதுரை ரோட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.92.02 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் 2021ல் துவங்கியது. இப்பணி 2023 அக்டோபருக்குள் முடிக்க வேண்டும். ஆனால் மாற்றுப்பாதை இல்லாதது, ஆக்கிரமிப்பு அகற்றம், வருவாய்த்துறை இழப்பீடு வழங்குவதில் தாமதம் போன்றவற்றால் மேம்பால பணிகள் 40 சதவீதம் கூட முடியவில்லை.
அரண்மனைப்புதுார் விலக்கு ரயில்வே கேட்டிற்கு மேற்குப்பகுதியில் துாண்கள் மீது கான்கிரீட் தடுப்புகள் வைப்பதற்கும், பணியை தீவிரப்படுத்த நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதன்படி மதுரையில் இருந்து வரும் வாகனங்கள் புதுபஸ் ஸ்டாண்ட், அன்னஞ்சி விலக்கு, அல்லிநகரம், பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாகவும் , போடி, கம்பம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் இதே வழியில் எதிராகவும் செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொடுவிலார்பட்டி, அரண்மனைப்புதுார் செல்லும் ரோட்டில் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. இப்பகுதியினர் வயல்பட்டி, வீரபாண்டி வழியாக தேனி வரும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
தேனி மதுரை ரோடு பங்களாமேடு ரவுண்டானா வரை மட்டும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து போலீசார் கூறுகையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டாலும் பாரஸ்ட்ரோடு, என்.ஆர்.டி., ரோடு, கே.ஆர்.ஆர்., நகர் உள்ளிட்ட போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பள்ளி நேரங்களில் இப்பகுதியில் போக்குவரத்தை சீர்படுத்த போலீசார் பணியில் இருப்பார்கள். என்றனர்.
நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'அரசு ஐ.டி.ஐ., அருகே உள்ள ரோட்டை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இந்த ரோடு பயன்பாட்டிற்கு வரும் என்றனர்.
நகராட்சி, மாவட்ட நிர்வாகம் சுப்பன்செட்டி தெரு, அரண்மனைப்புதுார் விலக்கு திட்டசாலையை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் டூவீலர், கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் அரண்மனைப்புதுார், அம்மச்சியாபுரம் வழியாக குன்னுார் மதுரை ரோட்டில் இணைய முடியும்.

