/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டிராபிக் போலீஸ் சோதனை; 5 ஆட்டோக்கள் பறிமுதல்
/
டிராபிக் போலீஸ் சோதனை; 5 ஆட்டோக்கள் பறிமுதல்
ADDED : நவ 14, 2024 07:04 AM
கம்பம் ; கம்பத்தில் டிராபிக் போலீஸ்,உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து துறை இணைந்து ஆட்டோக்களின் ஆவணங்களை சரிபார்த்தனர். இதில் பெர்மிட் இல்லாத 5 ஆட்டோக்கள் பிடிபட்டது.
கம்பம் உத்தமபாளையம் பகுதியில் நூற்றுக்கணக்கான ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. வரி ஏய்ப்பு செய்து ஆட்டோக்கள் ஒடுவதாக கிடைத்த தகவலின்பேரில் கம்பம் டிராபிக் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் உத்தம பாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தரராமன் இணைந்து கம்பம் மெயின்ரோடு, காமயகவுண்டன்பட்டி விலக்கு உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்தனர். 30 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் சோதனை செய்யப்பட்டன . அதில் 5 ஆட்டோக்களில் பெர்மிட் இல்லாமல் ஓடியது கண்டுபிடிக்கப்பட்டு மோட்டார் வாகன ஆய்வாளர் பறிமுதல் செய்தார் . ஒவ்வொரு ஆட்டோவிற்கும் தலா ரூ.5500 அபராதம் விதிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பின் வட்டார போக்குவரத்து துறையும், டிராபிக் போலீசாரும் இது போன்ற சோதனையை நடத்தி உள்ளனர். இந்த சோதனையில் டிராபிக் எஸ்.. ஐ.க்கள் ஜக்கப்பன், கார்த்திக் உள்ளிட்ட டிராபிக் போலீசார் ஈடுபட்டனர்.