/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஒரே நேரத்தில் இரு ரயில்கள் வந்ததால் போக்குவரத்து பாதிப்பு
/
ஒரே நேரத்தில் இரு ரயில்கள் வந்ததால் போக்குவரத்து பாதிப்பு
ஒரே நேரத்தில் இரு ரயில்கள் வந்ததால் போக்குவரத்து பாதிப்பு
ஒரே நேரத்தில் இரு ரயில்கள் வந்ததால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : மார் 09, 2024 09:07 AM

தேனி : சென்னை சென்ட்ரல் முதல் போடி வரை செல்லும் அதிவிரைவு ரயில், சரக்கு ரயில் ஒரே நேரத்தில் சென்றதால் தேனி - பெரியகுளம் ரோடு ரயில்வே கேட்டை கடக்க முடியாமல் நீண்ட நேரம் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
நேற்று மாலை சென்னை -போடி அதிவிரைவு ரயில் மதுரையில் இருந்து தேனி நோக்கி வந்தது. அதே நேரத்தில் தேனி வந்த சரக்கு ரயிலும் வந்தது. இதனால் மூடப்பட்ட ரயில்வே கேட் நீண்ட நேரமாக திறக்காமல் இருந்தது. நேற்று சிவராத்திரி குல தெய்வ கோயில்களுக்கு செல்வோர் கார், டூவீலர்கள் என அதிகளவிலான வாகனங்களில் வந்தனர். இந்நிலையில் ரயில்வே கேட் நீண்ட நேரம் திறக்காததால் நகரில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. வேலைக்கு சென்று விடு திரும்பியோர் ரோட்டில் நீண்டநேரம் காத்திருந்தனர். 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.நெருக்கடியை தவிர்க்க போக்குவரத்து போலீசார் கம்பம் வழியாக வந்த வாகனங்களை பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் அனுமதித்து மதுரை ரோடு வழியாக போக்குவரத்தை மாற்றி அனுப்பினர்.

