/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேர்வை சரியாக எழுதாததாக தற்கொலை வாலிபர் செயலால் சோகம்
/
தேர்வை சரியாக எழுதாததாக தற்கொலை வாலிபர் செயலால் சோகம்
தேர்வை சரியாக எழுதாததாக தற்கொலை வாலிபர் செயலால் சோகம்
தேர்வை சரியாக எழுதாததாக தற்கொலை வாலிபர் செயலால் சோகம்
ADDED : ஜூலை 21, 2025 02:20 AM

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் குரூப் 4 தேர்வை சரியாக எழுதாததாக பெற்றோர் ஆறுதல் கூறிய பிறகும் 26 வயது வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கம்பம் ஆங்கூர்பாளையத்தைச் சேர்ந்த பாண்டியன் மகன் இளமனோ 26. இவர் கம்பம் பாரதியார் நகரில் நண்பர்களுடன் வீடு எடுத்து தங்கி குரூப் 4 தேர்வுக்கு படித்து வந்தார். ஜூலை 12ல் ராயப்பன்பட்டி மேல்நிலைப் பள்ளியில் குரூப் 4 தேர்வை எழுதினார். தேர்வு முடிந்த பின் வீட்டிற்கு வந்த இளமனோ, தேர்வை சரியாக எழுதவில்லை என நண்பர்களிடம் கூறி வருத்தப்பட்டார். பின் ஆங்கூர்பாளையம் வீட்டிற்கு சென்றவர் சோகமாகவே இருந்தார். பெற்றோர் அவரை சமாதானப்படுத்தினர். இந்நிலையில் கம்பத்தில் தங்கிப் படித்த வீட்டில் இளமனோ துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகனை காணவில்லை என தேடிய பெற்றோர் மகன் துாக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியுற்றனர். கம்பம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.