/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முன் அறிவிப்பு இன்றி கிளம்பிய ரயில்: போடி பயணிகள் அவதி
/
முன் அறிவிப்பு இன்றி கிளம்பிய ரயில்: போடி பயணிகள் அவதி
முன் அறிவிப்பு இன்றி கிளம்பிய ரயில்: போடி பயணிகள் அவதி
முன் அறிவிப்பு இன்றி கிளம்பிய ரயில்: போடி பயணிகள் அவதி
ADDED : ஜன 02, 2025 07:04 AM
தேனி: போடி முதல் மதுரை செல்லும் பயணிகள் அதிவிரைவு ரயிலை நேற்று மாலை 6:00 மணிக்கு புறப்படுவதற்கு பதில், 9 நிமிடங்கள் முன்னதாக 5:51 மணிக்கு எடுத்து சென்றதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த பயணிகள் விரைவு ரயில் தினமும் போடியில் மாலை 6:00 மணிக்கு புறப்பட்டு மதுரை சென்றடைகிறது. புத்தாண்டை முன்னிட்டு அனைத்து ரயில்களின் நேரத்தையும் மாற்றி, தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், போடி - மதுரை பயணிகள் விரைவு ரயிலுக்கான நேரத்தை அறிவிக்கவில்லை.
இதனால் வழக்கம் போல் மாலை 6:00 மணிக்கு புறப்படும் என எண்ணிய போடி ரயில்பயணிகள் சிலர் ரயில் ஏற வந்து நிலையத்தில் புறப்பட்டு சென்றதால் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும் போடி - மதுரை பயணிகள் விரைவு ரயில் எண் 060702 எண்ணில் இருந்து 56702 என மாற்றப்பட்டுள்ளது.மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் முறையான அறிவிப்பு வெளியிடாததால், பயணிகள் குழப்பம் அடைந்தனர்.