ADDED : டிச 04, 2024 09:36 AM
தேனி : தேனி நாராயணபுரத்தில் அவரையில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. பயிர் பாதுகாப்பு மைய இயக்குநர் சாந்தி, அவரையில் புள்ளிக்காய்ப்புழு, சாறுண்ணும் பூச்சிகளின் பாதிப்பை கட்டுப்படுத்துவது பற்றி பேசினார்.
தைவானில் உள்ள உலக காய்கறிகள் மைய பூச்சியியல் முதன்மை விஞ்ஞானி சீனிவாசன் ராமசாமி ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைபற்றி விளக்கினார். வேளாண் பல்கலை பேராசிரியர் முருகன் பூச்சி கொல்லிகளின் உபயோகத்தை குறைக்கும் வழிமுறைகள் பற்றியும், பேராசிரியர் அங்கப்பன் பூஞ்சானகொல்லிகளை பயன்படுத்துவது பற்றியும், வேளாண் விரிவாக்க பயிற்சி மைய தலைவர் ஆனந்தராஜா, பயிர்பாதுகாப்பு துறை விஞ்ஞானி சண்முகம் உள்ளிட்டோர் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினர். பயிற்சியை தோட்டக்கலைத்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.