/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
திருச்சி ஐ.ஐ.எம்.,ல் ஊரக வளர்ச்சித் துறையினருக்கு பயிற்சி
/
திருச்சி ஐ.ஐ.எம்.,ல் ஊரக வளர்ச்சித் துறையினருக்கு பயிற்சி
திருச்சி ஐ.ஐ.எம்.,ல் ஊரக வளர்ச்சித் துறையினருக்கு பயிற்சி
திருச்சி ஐ.ஐ.எம்.,ல் ஊரக வளர்ச்சித் துறையினருக்கு பயிற்சி
ADDED : ஆக 08, 2025 12:00 AM
தேனி: தேனி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு பணி மேலாண்மை தொடர்பாக திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் ஒரு வார பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் மாவட்டந்தோறும் ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் 30 அலுவலர்களுக்கு திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவன கல்லுாரியில் (ஐ.ஐ.எம்.,) 5 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் தேனி மாவட்டத்தை சேர்ந்த பி.டி.ஓ., ஏ.பி.ஓ.,க்கள் உள்ளிட்ட 30 பேர் இந்த பயிற்சியில் பங்கேற்றோம்.
பயிற்சியில் ஒரு திட்டத்தை மக்களிடம் எவ்வாறு கொண்டு சேர்ப்பது, திட்டம் தொடர்பான விழிப்புணர்வுகள் எவ்வாறு ஏற்படுத்துவது, பணியாளர்களிடம் எவ்வாறு வேலை வாங்குவது, முடிந்த பணிகள், நடைபெறும் திட்டங்களை எவ்வாறு எல்லாம் வகைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன., என்றனர்.