/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மண்புழு உரம் உற்பத்தி மாணவர்களுக்கு பயிற்சி
/
மண்புழு உரம் உற்பத்தி மாணவர்களுக்கு பயிற்சி
ADDED : செப் 30, 2025 04:44 AM
உத்தமபாளையம்: வேளாண், தோட்டக்கலைப் பயிர் சாகுபடியில் கூடுதல் மகசூல் என்ற இலக்கிற்காக ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் பயன்பாடு அதிகரித்து மண் வளம் பாதித்துள்ளது. இதனால் சுற்று சூழல் மாசுபடுவது, மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க இயற்கை விவசாய நடைமுறைகளை பின்பற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்படுள்ளது. அதன்பேரில் உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி சுற்றுச் சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் மஜிதா பேகம், உறுப்பினர் பிரியா ஆகியோர் மாணவ மாணவிகளை புதுப் பட்டியில் உள்ள மண்புழு உரக் கூடத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு மண் புழு உரம் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது, மண்புழு உரத்தினால் ஏற்படும் நன்மைகள் அதிக மகசூல், நோய் தாக்காமல் பார்த்து கொள்வது , மனித ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் போன்ற அம்சங்களை பேராசிரியர்கள் விளக்கி கூறினார்கள்.