/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கணினி வழி கற்றலை வகுப்பறையில் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி
/
கணினி வழி கற்றலை வகுப்பறையில் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி
கணினி வழி கற்றலை வகுப்பறையில் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி
கணினி வழி கற்றலை வகுப்பறையில் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி
ADDED : அக் 11, 2024 05:41 AM
உத்தமபாளையம்: முதுகலை ஆசிரியர்களுக்கு கணினி வழி கற்றலை வகுப்பறைகளில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கான பயிற்சி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் வழங்கியது.
கல்வி கற்பித்தல் கணிணி மயமாகி வருகிறது.
தினமும் ஒரு தொழில்நுட்பம் வெளியாவதால் ஆசிரியர்களை அதற்கேற்ப அப்டேட் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
உத்தமபாளையம் மாவட்ட ஆசிரியர் கல்வி,பயிற்சி நிறுவனம் முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சியை கருத்தராவுத்தர் கல்லூரியில் நடத்தியது. முதுகலை ஆசிரியர்களின் 'பணித் திறன் மேம்பாடு,செயல்திறன் மிகு வகுப்பறைகளை உருவாக்குவது' என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. பயிற்சியை மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவன முதல்வர் ராஜேஸ்வரி துவக்கி வைத்தார்.
பணியிடை பயிற்சி துறை தலைவர் பிரபு, துணை முதல்வர் கீதாராணி பங்கேற்றனர்.
கருத்தராவுத்தர் கல்லூரி முதல்வர் முகமது மீரான் பேசினார். முதுகலை ஆசிரியர்கள் ஜாபர் சாதிக், முகேஷ் , ஷேக் முகமது ஆகியோர் பயிற்சியில் கருத்தாளர்களாக செயல்பட்டனர். 48 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்றனர். இவர்கள் ஒன்றிய அளவில் மற்ற ஆசிரியர்களுக்கு கருத்தாளர்களாக இருந்து பயிற்சி வழங்குவார்கள்.