/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆறு துணை தாசில்தார்கள் ஆர்.ஐ.,க்கள் பணியிட மாற்றம்
/
ஆறு துணை தாசில்தார்கள் ஆர்.ஐ.,க்கள் பணியிட மாற்றம்
ஆறு துணை தாசில்தார்கள் ஆர்.ஐ.,க்கள் பணியிட மாற்றம்
ஆறு துணை தாசில்தார்கள் ஆர்.ஐ.,க்கள் பணியிட மாற்றம்
ADDED : ஜன 30, 2024 07:08 AM
தேனி : மாவட்டத்தில் 6 துணை தாசில்தார்கள், 23 ஆர்.ஐ.,க்கள் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் ஷஜீவனா, டி.ஆர்.ஓ., ஜெயபாரதி உத்தரவிட்டுள்ளனர்.
மாவட்டத்தில் நிர்வாக காரணங்களுக்காக உத்தமபாளையம் தேர்தல் பிரிவு துணை தாசில்தார் குமரன், உத்தமபாளையம் வட்ட வழங்கல் அலுவலர் பாண்டி, தேனி கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு துணை தாசில்தார் ராஜா, பெரியகுளம் தலைமையிடத்து துணை தாசில்தார் ராஜாராம், பெரியகுளம் ராஜஸ்ரீ சர்க்கரைஆலை துணை தாசில்தார் உமாதேவி, தேனி தாசில்தார் அலுவலக தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சித்ராதேவி ஆகிய 6 பேர் பணியிட மாற்றமும், போடி வனநில வரித்திட்ட அலுவலக முதுநிலை ஆர்.ஐ., அப்துல்நாசர், பெரியகுளம் ஆர்.டி.ஓ., அலுவலக முதுநிலை ஆர்.ஐ., சரவணன், கலெக்டர் அலுவலக முதுநிலை ஆர்.ஐ., மாரிமுத்து ஆகிய மூவர் துணை தாசில்தாராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இந்த உத்தரவினை கலெக்டர் ஷஜீவனா பிறப்பித்துள்ளார்.
மேலும் 23 ஆர்.ஐ.,க்கள் பணியிட மாற்றமும், 3 வி.ஏ.ஓ.,க்கள், 2 தட்டச்சர்கள் என 5 பேரை ஆர்.ஐ.,க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இந்த உத்தரவினை டி.ஆர்.ஓ., ஜெயபாரதி பிறப்பித்துள்ளார்.
பணியிட மாறுதல், பதவி உயர்வு பெற்றவர்களின் மறுப்போ, மேல்முறையீடு, விடுப்பு ஏற்றுக் கொள்ளப்படாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.