/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணையில் மீன்கள் சில்லறை விற்பனையில் வெளிப்படை தன்மை தேவை மொத்த வியாபாரிகளுக்கு முக்கியதுவத்தால் பொதுமக்கள் ஏமாற்றம்

ADDED : ஏப் 24, 2025 06:09 AM
ஆண்டிபட்டி: வைகை அணையில் சில்லறை விற்பனையில் பொதுமக்களுக்கு மீன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
வைகை அணையில் கட்லா, மிருகாள், ரோகு வகை செயற்கை மீன்களும், இயற்கையாக வளரும் ஆறா, சொட்டைவாளை, கெண்டை, உளுவை வகை மீன்களும் உள்ளன.
வைகை அணையில் மீன்கள் பிடித்து விற்பனை செய்வதற்கு தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. தினமும் உள்ளூர் மீனவர்கள் மூலம் பிடிக்கப்படும் மீன்கள் ஒப்பந்ததாரர் மூலம் வைகை அணை  நீர்த்தேக்க பகுதியில் விற்பனை செய்யப்படுகிறது. மீன்களை உள்ளூர் வியாபாரிகள் 10 முதல் 20 கிலோ வரையில் மொத்தமாக வாங்கி விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். வைகை அணை மீன்கள் சுவையாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் நேரடியாக சென்று மீன்கள் வாங்க தினமும் காத்திருக்கின்றனர்.
ஒன்று முதல் மூன்று கிலோ வரை வாங்க காத்திருக்கும் பொதுமக்களுக்கு  டோக்கன் எங்கு பெறுவது, எங்கு மீன் வாங்குவது என்பது கூட மீன்வளத்துறை தெரிவிப்பது இல்லை. மொத்தமாக வியாபாரிகளுக்கு விற்க ஆர்வம் காட்டும் மீன்வளத்துறை பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என கருதுவது இல்லை.
கடும் முயற்சிக்கு பின் பொதுமக்கள் ஒருசிலர்  டோக்கன் வாங்கினாலும் வியாபாரிகளுக்கு முக்கியத்துவம் தருவதால் பொதுமக்கள் மீன்கள் வாங்க முடியாமல் காத்திருக்கின்றனர்.
சில்லறை விற்பனையில் மீன்கள் வாங்க வரும் பொது மக்களுக்கும் உடனுக்குடன் கிடைப்பதற்கு ஒப்பந்ததாரர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.