/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பமெட்டு ரோட்டில் மரம் விழுந்து 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ADDED : ஜூலை 26, 2025 04:24 AM

கம்பம்: கம்பமெட்டு மலைப் பாதையில் மரம் விழுந்ததால், நேற்று பிற்பகலில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கம்பத்தில் இருந்து கேரளா செல்ல குமுளி, கம்பமெட்டு மலைப் பாதைகள் உள்ளன. கம்பமெட்டு மலைப் பாதை 8 கி.மீ. துாரம் கொண்டவையாகும். இதில் 25 க்கும் மேற்பட்ட கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.
செங்குத்தான இந்த மலைப் பாதையில் அடிக்கடி மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்.
தற்போது கடந்த சில நாட்களாக விடாமல் மழை பெய்து வருவதால், மலைப்பாதை 18 வது வளைவில் பெரிய மரம் ஒன்று ரோட்டின் குறுக்கே விழுந்தது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார், நெடுஞ்சாலைத் துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு மேல் போக்குவரத்து சீரானது.