ADDED : ஜூலை 01, 2026 12:34 AM

அ நிறம் | அளவு
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு மயிலாடும்பாறை வருஷநாடு உள்ளிட்ட மலைக் கிராமங்களில் சில நாட்களாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.
கொம்புக்காரன்புலியூர் அருகே ரோட்டின் ஓரத்தில் இருந்த இலவமரம் வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்தது.விழுந்த மரம் அப்பகுதியில் இருந்த மின் கம்பிகளையும் சேதப்படுத்தியது. தகவல் அறிந்து கடமலைக்குண்டு தீயணைப்புத்துறையினர், நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் இணைந்து இயந்திரங்கள் உதவியுடன் ரோட்டில் கிடந்த மரத்தை அப்புறப்படுத்தினர். ஒரு மணி நேரத்திற்குப் பின் போக்குவரத்து சீரானது.
