ADDED : டிச 01, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : போடி திருமலாபுரம் நாடார் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் சார்பில் கால்நடை மருத்துவமனையில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
கால்நடை உதவி இயக்குனர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். முமேற்பார்வையாளர் ஜெயக்குமார், வன பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகர், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் முருகேசன் முன்னிலை வகித்தனர். மருத்துவமனை வளாகத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன.