/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் இருந்து தொலைதூரம் செல்லும் அரசு பஸ்களில் 'டிரிப் கட்'! வசூல் இல்லை என நிறுத்தியதால் பயணிகள் அவதி

ADDED : ஆக 04, 2024 06:18 AM

தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், தேவாரம், போடி, கம்பம் 1, கம்பம் 2, லோயர் கேம்ப் ஆகிய ஏழு ஊர்களில் அரசு போக்குவரத்து கழக பஸ் டெப்போக்கள் உள்ளன. இந்த டெப்போக்களில் இருந்து தினமும் 300க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் தேனி மாவட்டத்தில்உள்ள அனைத்து ஊர்களுக்கு சென்று திரும்புகிறது. கடந்த சில வாரங்களாக தொலை தூரங்களுக்கு செல்லும் அரசு பஸ்களின் 'ட்ரிப்' அவ்வப்போது ரத்து செய்யப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
பயணிகள் கூறியதாவது: ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் இருப்பதில்லை. பள்ளி, கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறை கிடைப்பதில்லை. இந்த மாதத்தில் பொதுவாகவே தொழில், வியாபாரம் மந்த நிலையில் இருக்கும். இதனால் பஸ்களில் பயணிப்போர் எண்ணிக்கையும் குறைந்து விடும். கலெக்சன் குறைவதால் பஸ்களை நிறுத்தினால் அந்த பஸ்களை எதிர்பார்த்து காத்திருக்கும் பயணிகளுக்கு ஏமாற்றமும், சிரமம் ஏற்படுகிறது. தேனி மாவட்டத்தில் இருந்து அதிகளவில் தொழிலாளர்கள், மாணவர்கள் கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களுக்கு வேலை வாய்ப்பு, கல்விக்காக சென்று வருகின்றனர். இவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பஸ் வரும் என நம்பி காத்திருந்தால் பல மணிநேரத்திற்கு பின் அந்த டிரிப் கட் ஆகிவிட்டது என தெரிவிக்கின்றனர். அதன்பின் அடுத்து வரும் பஸ்சில் காத்திருந்து செல்ல வேண்டியுள்ளது.
போக்குவரத்து துறையினர் கூறியதாவது: பஸ்களில் பயணிகளே இல்லை என்றால் எப்படி ஓட்ட முடியும். டீசல் இழப்பு ஏற்படும். எனவே ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக பஸ்கள் இருந்தால் பயணிகளுக்கு பாதிப்பு இன்றி சில ட்ரிப்கள் குறைக்கப்பட்டுள்ளது. குறைந்த தூர டிரிப்கள் பெரும்பாலும் ரத்து செய்யப்படுவதில்லை என தெரிவித்தனர்.