/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பசுக்கன்றுகளின் உற்பத்தி அதிகரிக்க 'டிரிபிள் எக்ஸ் செமன்' சினை ஊசி
/
பசுக்கன்றுகளின் உற்பத்தி அதிகரிக்க 'டிரிபிள் எக்ஸ் செமன்' சினை ஊசி
பசுக்கன்றுகளின் உற்பத்தி அதிகரிக்க 'டிரிபிள் எக்ஸ் செமன்' சினை ஊசி
பசுக்கன்றுகளின் உற்பத்தி அதிகரிக்க 'டிரிபிள் எக்ஸ் செமன்' சினை ஊசி
ADDED : ஜூலை 02, 2025 06:54 AM

தேனி : உத்திரபிரதேசத்தில் பசுக்களின் உற்பத்தி அதிகரிக்க உதவிய டிரிபிள் எக்ஸ் செமன் ஊசி, தேனி மாவட்ட கால்நடை மருந்தகங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன,'' என கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் கோயில்ராஜா தெரிவித்தார்.
கறவை மாடுகளின் சினை பருவத்தை காணத் தவறுதல், பருவத்தில் ஏற்படும் அயர்ச்சி, சாதகமற்ற தட்பவெட்ப நிலை, இனப்பெருக்க உறுப்புக்களைத் தாக்கும் நோய்கள், கனநீர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளால் மாடுகள் சினை பிடிக்காமல் பாதிக்கப்பட்டன. இதனை தவிர்க்க கால்நடைத்துறை சினை ஊசிகளை செலுத்தி வந்தனர்.
இதில் 50 சதவீத பசுக்கன்றுகள், 50 சதவீதம் கிடேறி கன்றுகளை மாடுகள் ஈன்றன. இதனால் விவசாயிகள் கால்நடை உற்பத்தி அதிகரிக்கவில்லை,வருவாய் ஈட்ட முடியவில்லை என்றனர்.
இதனை தவிர்க்க கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேனி மாவட்டத்தில் 135 மி.மீ., நீளம், 2.8 மி.மீ., அகலம் உள்ள ஊசி குப்பியில் 0.5 எம்.எல் அளவுள்ள 'டிரிபிள் எக்ஸ் செமன்' உள்ள புதிய சினை ஊசி பசுக்களுக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை செலுத்தி சினைப்பிடிக்கும் கறவை மாடுகள் 85 சதவீதம் பசுக்கன்றுகளையும், 15 சதவீதம் கிடேறி கன்றுகளை ஈன்று வருவதால் கால்நடை உற்பத்தி அதிகரிக்கும். இணை இயக்குனர் கூறியதாவது: கடந்தாண்டு உத்திரபிரதேசத்தில் டிரிபிள் எக்ஸ் செமன்' ஊசி அறிமுகப்படுத்தி நல்ல பலன் கிடைத்தது. தற்போது தமிழகத்தில் அறிமுகம் ஆகியுள்ளது.
விவசாயிகளுக்கு ஒரு ஊசி ரூ.175க்கும், சினைதவறினால் மறுமுறை 21 நாட்கள் கழித்து ரூ.150க்கும் இந்த ஊசி வழங்கப்படும். கால்நடை மருந்தகங்களில் தயார் நிலையில் உள்ளன. கறவை மாடுகள் வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.