/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
திராட்சை பழமாக மாறுவதில் சிக்கல்; பன்னீர் திராட்சை மீது மும்முனை தாக்குதல்
/
திராட்சை பழமாக மாறுவதில் சிக்கல்; பன்னீர் திராட்சை மீது மும்முனை தாக்குதல்
திராட்சை பழமாக மாறுவதில் சிக்கல்; பன்னீர் திராட்சை மீது மும்முனை தாக்குதல்
திராட்சை பழமாக மாறுவதில் சிக்கல்; பன்னீர் திராட்சை மீது மும்முனை தாக்குதல்
ADDED : ஜன 12, 2024 06:31 AM
கம்பம் : தொடர் மழை காரணமாக கொடிகளில் முதிர்ச்சியடைந்த திராட்சை பழமாக மாறததால் அவற்றை வெட்டி கீழே எறியும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை காலம் தவறி பெய்து வருகிறது. கார்த்திகை மாதம் விளக்கு வைத்தால் மழை நின்று விடும் என்பது பொய்த்து போனது. கார்த்திகை மாதம் விளக்கு வைத்த பின்பு தான் இந்தாண்டு மழையே பெய்ய ஆரம்பித்துள்ளது. மேலும் கார்த்திகை முடிந்து மார்கழி மாதமும் நிறைவு பெறும் நிலையிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
கம்பம் பள்ளத்தாக்கில் கடந்த 10 நாட்களுக்கும் - மேலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், திராட்சை கொடிகளில் முதிர்ச்சியடைந்த காய்கள், பழமாக மாறாத நிலை ஏற்பட்டுள்ளது . இதற்கு காரணம் மழை நீர் காய்களுக்குள் சென்று பழுக்கும் தன்மையை குறைத்து விட்டது . இதனால் பல தோட்டங்களில் திராட்சை காய்களை வெட்டி கீழே எறிந்து வருகின்றனர்.
அதேபோல தொடர்ந்து சூரிய ஒளி கிடைக்காததால் கவாத்து அடித்த கொடிகளில் பூ பூக்கும் செயல் நடைபெறவில்லை. இதனால் திராட்சை மகசூல் குறையும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக திராட்சை முன்னோடி விவசாயி முகுந்தன், தொடர்ந்து 10 நாட்களாக சூரிய ஒளி இல்லாததால் திராட்சை கொடிகளில் பூ பூக்கவில்லை. முதிர்ச்சியடைந்த காய்களும் பழமாக பழுக்கும் தன்மைக்கு மாறவில்லை. மேலும் மஹாராஷ்டிராவிலிருந்து விதையில்லா திராட்சை வரத்து இருப்பதாலும், கம்பம் பன்னீர் திராட்சைக்கு மும்முனை தாக்குதல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.