/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குமுளி மலைப்பாதையில் லாரி பழுது 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
/
குமுளி மலைப்பாதையில் லாரி பழுது 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
குமுளி மலைப்பாதையில் லாரி பழுது 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
குமுளி மலைப்பாதையில் லாரி பழுது 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ADDED : மார் 17, 2024 06:26 AM
கூடலுார்: குமுளி மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரியால் தமிழக கேரள மாநிலங்களுக்கு இடையே 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்கும் முக்கிய வழித்தடத்தில் குமுளி மலைப் பாதையும் ஒன்றாகும்.
வாகன போக்குவரத்து அதிகம். நேற்று முன்தினம் நள்ளிரவு12 மணிக்கு கேரளாவிலிருந்து தமிழகப் பகுதிக்கு ரப்பர் ஏற்றி வந்த லாரி குமுளி மலைப்பாதையில் உள்ள பழைய போலீஸ் சோதனை சாவடி அருகே பழுதாகி பாலத்தில் மோதி நின்றது. இதனால் மற்ற வாகனங்கள் கடந்து செல்ல முடியவில்லை. இரவில் லாரியை அகற்ற சிரமம் ஏற்பட்டது.
தினமும் காலையில் கேரளாவிற்கு தோட்ட வேலைக்கு செல்லும் நூற்றுக்கணக்கான ஜீப்புகள் கம்பம் மெட்டு வழியாக திருப்பி விடப்பட்டன. மேலும் பஸ்சில் சென்ற தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாமல் திரும்பினர். நேற்று காலை 7:00 மணிக்கு லாரியை அகற்றியபின் போக்குவரத்து துவங்கியது.