/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உருளை கிழங்கு சாகுபடி பாதிப்பு: விவசாயிகள் கவலை
/
உருளை கிழங்கு சாகுபடி பாதிப்பு: விவசாயிகள் கவலை
ADDED : நவ 11, 2024 05:04 AM

மூணாறு: காந்தலுார் பகுதியில் உருளைக் கிழங்கு அறுவடை துவங்கிய நிலையில் விளைச்சல் இன்றி விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இடுக்கி மாவட்டத்தில் தமிழக எல்லையோரம் உள்ள காந்தலுார் ஊராட்சியில் காய்கறி, பழம் வகைகள் பெரும் அளவில் சாகுபடி நடக்கிறது.
ஆப்பிள் உள்பட பல்வேறு பழத்தோட்டங்கள் உள்ளதால் அவற்றை பார்க்க தினமும் ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
அதேபோல் காலநிலைக்கு ஏற்ப காய்கறி சாகுபடியும் பெரும் அளவில் நடக்கும். ஆனால் இந்தாண்டு பருவ நிலை மாற்றம், அரசு உதவி இன்மை உள்பட பல்வேறு காரணங்களால் உருளை கிழங்கு, குளிர்கால காய்கறி சாகுபடி செய்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
சில விவசாயிகள் மட்டும் உருளை கிழங்கு சாகுபடி செய்தனர். தற்போது அறுவடை நடந்து வருகிறது. அறுவடை சமயத்தில் மழை பெய்ததால் விளைச்சல் பெரிதும் பாதித்தது.
தமிழகத்தில் மேட்டுப் பாளையத்தில் இருந்து விதை கிழங்கு வாங்கி வந்து பெரும்பாலான விவசாயிகள் சாகுபடி செய்தனர்.
45 கிலோ விதை கிழங்கு நடவு செய்தால் 450 கிலோ வரை விளைச்சல் இருக்க வேண்டும் என்பது விவசாயிகளின் இலக்கு. ஆனால் பருவ நிலை மாற்றத்தால் 45 கிலோ விதை கிழங்கு நடவு செய்தவர்களுக்கு 100 கிலோ மட்டும் விளைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.