ADDED : ஏப் 13, 2025 07:15 AM
போடி : போடி புதூர் பாலநாகம்மாள் கோயில் திருவிழாவில் நேற்று முன்தினம் இரவு கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது ஒலிபெருக்கியில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலி பரப்பினர்.
போடி டவுன் போலீஸ்காரர் விஜய் 33, ரோந்து சென்றவர் அதிக ஒலியில் பாடல் ஒலிபரப்ப கூடாது என எச்சரித்து சென்றார்.பின் மீண்டும் இரவு 1:15 மணி அளவில் பாடல் ஒலி பரப்பி உள்ளனர். எஸ்.ஐ., குரு கவுதம் தலைமையில் சம்பவ இடத்திற்கு விஜய் உள்ளிட்ட போலீசார் சென்றனர். புதூரில் வசிக்கும் மதன் 45, மாரியப்பன் 25, இருவரும் கோயில் திருவிழாவில் மைக் செட் போடுவோம் என கூறி விஜய்யிடம் வாக்கு வாதம் செய்து, கழுத்தை பிடித்து நெரித்து அரசு பணி செய்ய விடாமல் தடுத்தனர்.
காயம் அடைந்த விஜய் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். விஜய் புகாரில் போடி டவுன் போலீசார் மதன், மாரியப்பன் இருவரையும் கைது செய்தனர்.