/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நகைக்கடையில் திருட முயன்ற இருவர் கைது
/
நகைக்கடையில் திருட முயன்ற இருவர் கைது
ADDED : டிச 26, 2024 05:27 AM
மூணாறு: நெடுங்கண்டம் நகைக்கடையில் நகை வாங்குவது போன்று நடித்து திருட முயன்ற மதுரை மாவட்டம், பேரையூரை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், பேரையூரைச் சேர்ந்தவர்கள் ஹைதர் 34, அனுஜன்முபாரக் 19.
இவர்கள் இருவரும் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டத்தில் உள்ள நகைக்கடையில் நகை வாங்க வந்தனர்.
அப்போது நகைகள் வைத்திருந்த பாக்கெட்டை  எடுத்து ஹைதர்  பதுக்க முயன்றபோது சிக்கினார்.
அவரை கைது செய்த நெடுங்கண்டம் போலீசார், தமிழகத்திற்கு பஸ்சில் தப்ப முயன்ற  அனுஜன்முபாரக்கை சாந்தாம்பறையில் வைத்து கைது செய்தனர்.
அவர்கள் இருவரும் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் எனவும் தமிழகத்தில் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களிலும், கேரளாவில் கோட்டயம் ஈஸ்ட் போலீஸ் ஸ்டேஷன் உள்பட பல்வேறு ஸ்டேஷன் களிலும் இருவர் மீது திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

