/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
26 டன் ரேஷன் அரிசி பதுக்கிய இருவர் கைது
/
26 டன் ரேஷன் அரிசி பதுக்கிய இருவர் கைது
ADDED : மார் 21, 2025 06:49 AM
தேனி : தேனி அருகே 26 டன் ரேஷன் அரிசி பதுக்கிய அல்லிநகரத்தை சேர்ந்த சகோதரர்கள் ரவிக்குமார் 36, துரைப்பாண்டி 34, ஆகியோரை உணவுப்பொருள் கடத்தல் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அல்லிநகரம் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள கோடவுனில் 26 மெட்ரிக் டன் ரேஷன் அரிசி பதுக்கியதை வழங்கல் பிரிவு அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக உத்தமபாளையம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புபிரிவு இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு வந்து பதுக்கி வைத்திருந்த ரவிக்குமார், துரைப்பாண்டியை போலீசார் கைது செய்தனர். பதுக்கல் தொடர்பாக மேலும் சிலரிடம் விசாரித்து வருகின்றனர்.