ADDED : அக் 11, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி எஸ்.ஐ. மணிகண்டன் மற்றும் போலீசார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பின்புறம் வாகன சோதனையில் இருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்த டூவீலரில் 30 கிராம் கஞ்சா இருந்துள்ளது. விசாரணையில் அவர்கள் மணியாரம்பட்டியைச் சேர்ந்த மாதவன் 40, நவின் 23, என்பதும், கஞ்சாவை விற்பனைக்காக வெளியூரிலிருந்து வாங்கி வந்ததும் தெரிய வந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.