ADDED : ஏப் 21, 2025 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் வாகனங்களில் கஞ்சா கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிபட்டி அருகே ஜக்கம்பட்டி காளியம்மன் கோயில் தெரு வினோத்குமார் 21.
இவரது நண்பர் பெரியகுளம் கீழ வடகரை ஸ்டேட் பாங்க் காலனி மனோஜ்குமார் 23. இருவரும் வாகனத்தில் பெரியகுளம் பகுதியில் கஞ்சா கடத்துவதாக பெரியகுளம் வடகரை போலீஸ் ஸ்டேஷனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் பெரியகுளம் கும்பக்கரை ரோட்டில் வாகனத்தில் சோதனையிட்டனர். வினோத்குமாரிடம் 19 கிராம், மனோஜ்குமாரிடம் 15 கிராம் கைப்பற்றப்பட்டன. இருவரும் கைதான நிலையில், வாகனம் கைப்பற்றப்பட்டது.-

