ADDED : மே 20, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: தேனி அருகே அரண்மனைபுதூர் கேசவன் 22, இவர் அதே ஊரைச் சேர்ந்த செல்வகுமார் 28,இடையே பிரச்னை இருந்தது.
இதுபற்றி செல்வகுமார் தனது நண்பர் நந்தகுமாரிடம் தெரிவித்துள்ளார். மூன்று நாட்களுக்கு முன் நந்தகுமார் அவரது நண்பர்கள் அய்யனார்புரம் விக்னேஸ்வரன், கோட்டப்பட்டி விக்னேஸ்வரன், மற்றொருவருடன் சேர்ந்து ஆதிபட்டியில் இருந்த கேசவனை ஆட்டோவில் ஏற்றி வந்து அம்மச்சியாபுரம் ரோட்டில் பேசி தாக்கியுள்ளனர்.
கேசவனிடம் இருந்த மொபைல் போன், ரூ.6 ஆயிரம் பறித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். கேசவன் புகாரில் க.விலக்கு போலீசார் நந்தகுமார் 26, செல்வகுமார் 28, ஆகியோரை கைது செய்தனர். இவர்களுடன் இருந்த விக்னேஸ்வரன், மற்றொரு விக்னேஸ்வரன் ஆகியோர்களை தேடி வருகின்றனர்.