/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனிக்கு 13 கிலோ கஞ்சா கடத்திய இருவர் கைது
/
தேனிக்கு 13 கிலோ கஞ்சா கடத்திய இருவர் கைது
ADDED : அக் 30, 2025 03:36 AM
பெரியகுளம்: திண்டுக்கல் மாவட்டம், பழநியிலிருந்து 13.401 கிலோ கஞ்சாவை தேனிக்கு கடத்தி வந்த கஞ்சா வியாபாரிகள் சீத்தாராமன் 61,முத்து 51, ஆகியோரை பெரியகுளம் வடகரை போலீசார் கைது செய்தனர்.
பழநியைச் சேர்ந்த சீத்தாராமன், முத்து, கஞ்சா வியாபாரிகள். பழநியிலிருந்து தேனிக்கு கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு செல்ல பெரியகுளம் வத்தலக்குண்டு, பைபாஸ் ரோடு, எ.புதுப்பட்டி பிரிவு அருகே பையுடன் நின்று கொண்டிருந்தனர். வடகரை எஸ்.ஐ., விக்னேஷிற்கு கஞ்சா கடத்தல் குறித்து தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., தலைமையிலான போலீசார் இருவரையும் சுற்றி வளைத்தனர். அவர்களது பைகளை சோதனையிட்டதில் 13.401 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களது கூட்டாளிகள் யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.

