ADDED : டிச 06, 2025 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: கம்பத்தில் இருந்து சாமாண்டிபுரம் செல்லும் ரோட்டில் கம்பம் தெற்கு போலீசார் ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கிடமான முறையில் டூவீலரில் சென்ற மூன்று பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் வைத்திருந்த பையை சோதித்த போது அதில் ஒரு கிலோ 150 கிராம் கஞ்சா இருந்தது. இதனை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் கம்ப மெட்டு காலனியை சேர்ந்த சகுபர் சாதிக் 34 , பிரேம் நசீர் 26, நாகூர் கனி 34 என்பது தெரிந்தது. இதில் சகுபர் சாதிக், பிரேம் நசீர் கைது செய்யப்பட்டனர். நாகூர்கனி தப்பியோடினார். கம்பம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

