/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் திருடிய இருவர் கைது
/
முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் திருடிய இருவர் கைது
ADDED : பிப் 04, 2024 03:37 AM
தேனி : தேனி பழனிசெட்டிபட்டியில் எல்.ஐ.சி., முகவர் வீட்டில் திருடிய த சரவணன் 37, ரவிச்சந்திரனை 50, போலீசார் கைது செய்தனர்.
பழனிசெட்டிபட்டி ஆஞ்சநேயா நகர் முன்னாள் ராணுவ வீரர் தனபால் 47. இவரது மனைவி ஜெகதீஸ்வரி 43, எல்.ஐ.சி., முகவராக உள்ளார்.
இவர்கள் ஜன.,26ல் ஒரு நிகழ்ச்சிக்காக வீட்டில் இருந்து காலை மதுரை சென்று மாலை வீடு திரும்பினர். இந்நிலையில் இவர்கள் வீட்டில் 10 பவுன் நகை, வெள்ளிப்பொருட்களை இருவர் திருடி சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. ஜெகதீஸ்வரி புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரித்து பரமக்குடியை சேர்ந்த சரவணன் 37, ரவிச்சந்திரன் 50 ஆகிய இருவரை நிலக்கோட்டையில் பிடித்து இருவரையும் கைது செய்தனர்.