ADDED : ஜூலை 31, 2025 03:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : போடி அருகே ரங்கநாதபுரம் காந்தி நகரை சேர்ந்தவர் பிரவீன் குமார் 31. இவர் ராணி மங்கம்மாள் சாலையில் டூவீலர் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.
இவர் சொந்த பயன் பாட்டிற்காக வைத்திருந்த டூவீலரையும், ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த யோகேஷ் என்பவர் மெக்கானிக் வேலைக்கு விட்ட டூவீலரையும் ஒர்க் ஷாப்பில் இரண்டு நாட்களுக்கு முன்பு நிறுத்தி வைத்து இருந்தார். வீட்டிற்கு சென்று விட்டு மறுநாள் காலையில் வந்து பார்த்த போது டூவீலர்கள் காணாமல் போனது தெரிந்தது.
பிரவீன் குமார் புகாரில் போடி தாலுகா இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில் காணாமல் போன டூவீலர்களை போலீசார் தேடி வந்தனர்.
கம்பம் மெட்டு காலனியை சேர்ந்த சிறுவர்கள் இருவர் டூவீலரை திருடியது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்ததோடு, டூவீலர்களையும் பறிமுதல் செய்தனர்.