/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கைதிக்கு கஞ்சா வழங்கிய இருவர் கைது
/
கைதிக்கு கஞ்சா வழங்கிய இருவர் கைது
ADDED : மார் 08, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கொலை வழக்கு விசாரணை கைதிக்கு கஞ்சா சப்ளை செய்த ஜெயமங்கலம் நடுப்பட்டி காலனி தெருவை சேர்ந்த ராஜபாண்டி 21, சின்னமனுார் திருவள்ளுவர் பள்ளித் தெரு தனுஷ்போடி 21, ஆகிய இருவரை தென்கரை போலீசார் கைது செய்தனர்.
சின்னமனுார் கொலை வழக்கில் ஒல்லிக்குச்சி என்ற விசாரணை கைதியை போலீசார் நேற்று விசாரணைக்காக தேனி மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்துவந்தனர். அவருக்கு கைதான இருவரும் 10 கிராம் கஞ்சாவை வழங்க முயற்சித்தனர். போலீசாரை கண்டதும் ஓடினர்.
பாதுகாப்பு போலீசார் பிடித்ததில் அவர்களிடம் 10 கிராம் கஞ்சா இருந்தது. இருவரையும் தென்கரை போலீசார் கைது செய்தார்.

