தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/போக்சோவில் இருவர் கைது

போக்சோவில் இருவர் கைது

போக்சோவில் இருவர் கைது


UPDATED : அக் 13, 2026 04:50 PM

ADDED : அக் 13, 2026 04:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 04:50 PM ADDED : அக் 13, 2026 04:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் வெவ்வேறு வழக்குகளில் இருவரை போக்சோ கைது செய்தனர்.

கட்டப்பனை அருகே கிழக்கு மாட்டுக்கட்டா பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் 26. திருமணமான இவர், 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். கட்டப்பனை போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையில் போலீசார் போக்சோவில் சந்தோஷை கைது செய்தனர்.

தலைமறைவு: செருதோணி அருகே மணியாரன்குடியைச் சேர்ந்தவர் நிஷாத்ஏலியாஸ் 23. குமுளியில் தனியார் தங்கும் விடுதிக்கு பணிக்கு சென்றவர், அங்கு 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இச்சம்பவம் குறித்து குமுளி போலீசார் நிஷாத்ஏலியாஸ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த நிலையில் தலைமறைவானார். அவரை, மணியாரன்குடியில் பதுங்கி இருப்பதாக தெரியவந்தது. அவரை நிழல் போலீசார் கைது செய்து, குமுளி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us