/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பார்வையற்ற இரு மாணவர்கள் சாதனை
/
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பார்வையற்ற இரு மாணவர்கள் சாதனை
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பார்வையற்ற இரு மாணவர்கள் சாதனை
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பார்வையற்ற இரு மாணவர்கள் சாதனை
ADDED : மே 17, 2025 03:35 AM

போடி: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேனி மாவட்டம், போடி 10 வது வார்டு நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் படித்த பார்வையற்ற மாணவர்கள் நந்திஷ் 471, நல்லு கிருஷ்ணன் 446, மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து உள்ளனர்.
போடி மதுரை வீரன் வடக்கு தெரு தம்பதியினர் மணிகண்டன், ரேவதி. கூலித் தொழிலாளி. இவர்களது மகன் நந்திஷ் 16, பிறவியிலேயே பார்வை இல்லை. இவர் போடி 10 வது வார்டு நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்தார். அரசு பொது தேர்வினை ஆசிரியர்கள் உதவியுடன் எழுதினார். இதில் நந்திஷ் தமிழில் 94, ஆங்கிலம் 89. கணிதம் 98, அறிவியல் 90, சமூக அறிவியல் 100 க்கு 100 என மொத்தம் 471 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து உள்ளார்.
போடி வெள்ளையாண்டி பிள்ளை தெருவில் வசிக்கும் தம்பதிகள் மணிகண்டன், முத்துலட்சுமி. கூலித் தொழிலாளி. இவரது மகன் நல்லு கிருஷ்ணன் பிறவியிலே பார்வையற்றவர். இவரும் இதே பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து பொது தேர்வினை ஆசிரியர்உதவியுடன் எழுதினார். இவர் தமிழில் 92, ஆங்கிலம் 75, கணிதம் 86, அறிவியல் 94, சமூக அறிவியல் 99. என மொத்தம் 446 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், ஆசிரியர்கள் கன்னிகா பரமேஸ்வரி, ராஜாத்தி, அன்புச்செல்வி உட்பட பலர் பாராட்டி பரிசு வழங்கினர்.
இரு மாணவர்கள் கூறுகையில், பெற்றோர்களின் பாசமும், ஆசிரியர்களின் தன்னம்பிக்கையும் எங்களை நன்கு படிக்க துாண்டியது.
இதனால் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற முடிந்தது. வகுப்பறையில் நடத்தும் பாடங்களை கவனமாக உள்வாங்கி படித்தோம்.
மாலையில் வீட்டிற்கு வந்த பின் ஆசிரியர்களிடம் அலைபேசியில் விளக்கம் கேட்டு தொடர் பயிற்சி மேற்கொண்டதால் அதிக மதிப்பெண் பெற முடிந்தது என்றனர்.