UPDATED : நவ 21, 2026 06:33 PM
ADDED : நவ 21, 2026 06:33 PM
அ நிறம் | அளவு
போடி: போடி தேவாரம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணி புரிபவர் டாக்டர் பிரவீன்ராஜ் 48. இரவு பணியில் இருந்துள்ளார். அப்போது போடி நகராட்சி காலனியை சேர்ந்த முகிலன், தீரன் மருத்துவமனைக்கு சென்று உள்ளனர். அங்கு பணிபுரிந்த செவிலியர் நோயாளிக்கு ஊசி போட முயன்ற போது, ஊசி போட விடாமல் தடுத்து, டேபிளில் இருந்த பொருட்களை தட்டிவிட்டு, டாக்டர் பணம் கேட்டா தரமாட்டாரா என மிரட்டி சென்றனர்.
டாக்டர் பிரவீன்ராஜ் புகாரில் போடி டவுன் போலீசார் முகிலன், தீரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்ற னர்.
