ADDED : செப் 21, 2026 07:43 PM
அ நிறம் | அளவு
தேனி, செப்.22–
பெரியகுளம் கல்லுப்பட்டியை சேர்ந்தவர் சாமிநாதன் 40.
கோடாங்கிபட்டியை சேர்ந்த இளையராஜா 38. இவர்கள் மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள். கோட்டூர் அருகே எஸ்.பி.எஸ்., காலனி பகுதியில் தோப்புகளில் மின் வழித்தடத்தில் உள்ள மரக்கிளைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மின்சாரம் பாய்ந்துவிடும் என்ற அச்சத்தில் 15 அடி உயரத்தில் இருந்து குதித்தனர். இருவரும் காயம் அடைந்து தேனி அரசு மருத்துவ கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டனர். புகாரின்பேரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
